சிவா-அறிவு வலைப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அனைவரையும் இவ்வலைப்பதிவிற்கு அன்போடு வரவேற்கிறேன் !

வியாழன், டிசம்பர் 15, 2011

இலங்கையின் நீர்வள நாகரிகம் தரம் -10


நீர்வள நாகரிகத்தின் பொருளாதார முறையும்
நீர்வள நாகரிகத்தின் சமூக முறையும்.

01. முக்கிய தொழிற் துறையாக விவசாயம் காணப்பட்டதை அறிந்து எழுதுவார்.

  • சேனைப் பயிர்ச் செய்கை - உழுந்து, பயறு, குரக்கன், சோளன்.
  • நெற்செய்கை
  • வீட்டுத் தோட்டம் - இஞ்சி, மிளகு, பாக்கு, வெற்றிலை, மரக்கறிவகை.
  • கால்நடை.

02. ஏனைய தொழில் துறைகளாக கைத்தொழில், வர்த்தகம் காணப்பட்டதைப் பட்டியல்படுத்துவார்.
  • கைத்தொழில் - செங்கல் ஓடு - தொழில் செய்வோர் ஒலுவடு என அழைக்கப்பட்டனர்.
- புடவை - குவேனி நூல் நூற்றல்
- உலோகம் - அபய கிரியில் உலோக நாணயம் கண்டுபிடிக்கப்படல்.
- மட்பாண்டம்
- கண்ணாடி
- ஆபரணம் - ஜேதவன அகழ்வில் நெல்மணி அளவில் 21 பூவேலைப்பாடு கொண்ட தங்க ஆபரணம்.
- மரவேலை
- கட்டட நிர்மாணம்.

  • வர்த்தகம் - உள்நாட்டு வர்த்தகம் வாணிப, வாணிக போன்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டன.
- உபதீசகாமத்தில் அந்தராப்பன எனும் சந்தை காணப்பட்டது.
- நாடெங்கிலும் நிகம் அல்லது நியம்கம் எனும் சிறுவர்த்தக நகர் காணப்படல்.
- பணப்பரிமாற்றமும், பண்டமாற்றும் காணப்பட்டது.
- எண்ணெய், மானிறைச்சி, சுண்ணாம்பு போன்றவை வாங்க பொன் காசு
பயனன்படுத்தப்படது.
- நாணயங்கள் கர்த்தாப்பள, காறவன, கஹவனு எனும் பெயரில் அழைக்கப்பட்டது.


  • வெளிநாட்டு வர்த்தகம் இதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகள்.
மேற்கு கிழக்கு வர்த்தகப்பாதையில் அமைந்திருத்தல்.
தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று நீரோட்டப்பாதையில் அமைந்திருத்தல்.
இந்தியாவிற்கு அண்மையில் காணப்படல்.
இயற்கைத் துறைமுகம் காணப்படல் - மகாதித்த, ஊராதொட்ட, கொடபாய, தம்பபன்னி, கோகர்ண, ஜம்புகோளப்பட்டினம்.
வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்த கீழைத்தேச நாடுகள் - அரேபியா, இந்தியா, சீனா.
மேலைத்தேச நாடுகள் - கிரேக்கம், உரோம்

ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்
முத்துக்கள், இரத்தினக்கல், யானைத்தந்தம், வாசனைத் திரவியம், யானை, ஆமை ஓடுகள், தேங்காய், மரம்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்.
பட்டுத்துணி, ஆயுதங்கள், மட்பாண்டங்கள், திராட்சைப்பழம், மதுபானம், கற்பூரம், சந்தனம், குதிரை.


03. பௌத்த மதம் விரைவாக வளர்ச்சி அடைந்தமைக்கான காரணங்களைக் கூறுவார்.
  • அரசன் பௌத்த மதத்தவனாகக் காணப்பட்டமை.
  • அமைச்சர்கள், பிரபுக்கள் பௌத்தவர்களாக இருந்தமை.
  • பௌத்தமத வருகைக்குமுன் ஒழுங்கமைக்கப்பட்ட மதம் காணப்படவில்லை.
சூ பௌத்த மதத்துடன் ஏனைய கலைகளும் வளர்ச்சியடைதல் - கட்டடம், ஓவியம்.

04. பௌத்த மதம் பிளவு படல் - வலகம்பாகு காலத்தில் அபயகிரி விகாரையை மையமாகக் கொண்ட மகாயானப்பிரிவு தோன்றல்.

  • பொலநறுவைக் காலத்தில் இந்து சமயச் செல்வாக்கு காணப்படல்.
16ம் சிவன் கோயில், பார்வதி,  சிவன் கோயில்கள் காணப்பட்டமை.
சந்திரவட்டக்கல்லில் எருது வடிவம் நீக்கப்பட்டமை.
  • கலாச்சாரத்துறை சிறப்புற்றுக் காணப்படல்.
கட்டடக்கலை - அவுக்கண, தொலுவில, ரஸ்வெகர, புதுருவகல.
ஓவியக்கலை - சிதுல்பௌவ, கரம்பலக குகை ஓவியம், சீகிரியா ஓவியம்.
  • இலக்கியங்கள் - பாளி இலக்கியம், சிங்கள இலக்கியம்.
பாளி இலக்கியம் - சமந்த பாசாதிகா, பபஞ்சசாதனி, மனோரத்த புரணி, சார்ந்ததீபனி (ஒழுக்கக்கோவை)

  • சிங்கள இலக்கியம் - மகா அட்டுவா, மகாபச்சரி அட்டுவா, குருந்தி அடுவா.
  • பொலநறுவைக்கால இலக்கியங்கள் - அமாவத்துற (குருளுகோமி) புத்தசரண, தம்சரண, சங்கசரண (வித்தியா சக்கரவர்த்தி)
  • பொலநறுவைக்கால உரைநடை இலக்கியங்கள் - ஜானகீகரண, தடாவங்ச, ஜானகசன்யை, வெஸதுருதா சன்யை.


05. வெளிநாடுகளுடன் உறவுகள் மேற்கொள்ளப்பட்டதை ஒழுங்கு படுத்திக் கூறுவார்.
  • ஆக்கிரமிப்பு - சூரதிஸ்ஸ மன்னன் காலத்தில் சேனன், குத்திகள், அசேலன் காலத்தில் - எல்லாளன் படையெடுப்பு.
  • குடியேற்றம் - விஜயன், மதுரை இளவரசி, பண்டுவாசதேவன், பக்தகச்சனா, மகிந்ததேரர், சங்கமித்தை.
  • திருமண உறவு - விஜயபாகு, திரிலோகசுந்தரி, இளவரசி மித்தா பாண்டிய இளவரசன்.
  • உதவி கோரல் - அபயநாக மன்னன், 1ம் முகலன், சிறிநாகன், 3ம் அக்கபோதி மானவர்மன்.
06. நீர்வள நாகரிகம் வீழச்சியுற்றமைக்கான காரணங்களை விபரித்துக் கூறுவார்.
வீழ்ச்சியுற்றமைக்கான காரணங்கள்.
  • 1215ல் மாகன் படையெடுப்பு (உடனடிக்காரணம்)
  • சிங்காசன உரிமைப்போட்டிகள்.
  • மத்திய நிர்வாகத்தில் ஏற்பட்ட குழப்பம்.
  • நீர்பாசனத் திட்ட சீர்குலைவு.
  • பிற்கால மன்னர்கள் பலவீனமானவர்களாகக் காணப்பட்டமை.
  • மக்கள் பாதுகாப்புத்தேடி இடம்பெயர்ந்தமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக